வவுனியாவில் இளைஞன் ஒருவன் 50 அடி நீளம், 30 அடி விட்டம், 15 அடி அகலம் உடைய இராட்சத சட்டை ஒன்றை வடிவமைக்க உள்ளனர்.
இதற்கான வடிவத்தினை வெட்டும் நிகழ்வு இன்று மாலை 4மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது,
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04,05ம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடை பெறும் வவுனியா மாவட்ட செயலகத்தின் மாவட்ட கலாசார அதிகார சபையின் சித்திரைக்கலை விழா வர்த்தக, கலை கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.