தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரை – ஜனாதிபதி வழங்கியுள்ள காலவகாசம்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிரியசாத் டெப் தலைமையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி இந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

தேர்தல் விதிமுறைகளை ஆய்வு செய்து, காலத்தின் தேவைக்கேற்ப தேர்தல் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஜூன் மாதம் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply