2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்றைய தினம்(25) நிகழவுள்ளது.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று வரும் சந்திர கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திர கிரகண நிகழ்வானது காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைய உள்ளது.