வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம்…!

வவுனியா சூசைப்பிள்ளையார்குள சந்தியில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச் சிலையடியில் கம்பன் நினைவு தினம் இன்று(25) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த அனைவரினாலும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply