யாழில் வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இரு வாரங்களுக்கு முன்னர்  வீதி விபத்தில் சிக்கி காயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கச்சாய் வீதியைச் சேர்ந்த க.கார்த்திகேசு (வயது- 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் கடந்த 8ஆம் திகதி சாவகச்சேரி  கச்சாய்  வீதியில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக சைக்கிளில் சென்ற வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வீதி வளைவில் அவர் மீது மோதியது. 

தலையில் படுகாயமடைந்த அவர், சுயநினைவை இழந்த நிலையில் சாவகச்சேரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கும் சுயநினைவு  திரும்பாததால் ஒரு வாரத்தின் பின்னர் சாவகச்சேரி  மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டார். 

பின்னர்  அங்கிருந்து சுயநினைவு திரும்பாத நிலையில் நான்கு தினங்களுக்கு முன்னர்  வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார். இந்தநிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply