உரிய சிகிச்சை வழங்காமையால் 5 வயது சிறுவன் பரிதாப மரணம்! யாழில் சோகம்

யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தியைச் சேர்ந்த 5 வயதுடைய கிருபாகரன் சுலக்சன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

ஆஸ்துமாவால் சிறுவன் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர். 

ஆனாலும், அதைச் சிறுவனுக்கு வழங்கவில்லை. 

இந்நிலையில் நேற்று அதிகாலை சிறுவன் நோயால் துடித்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் இறப்புவிசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

பெற்றோர் சிறுவனுக்கு உரிய சிகிச்சையளித்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply