பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது..!

கொழும்பில்  பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட  10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 20 விசேட குழுக்களால், பதிவு செய்யப்பட்ட 446 பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் இதுவரை 80 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 80 சந்தேக நபர்களில் 53 சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply