கிளிநொச்சியில் உளவு இயந்திரம் செலுத்தி பெண்கள் சாதனை!

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றது.

உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில் பெறுமதி சேர்த்தனர்.

குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் கைலாகு கொடுத்து உட்சாகப்படுத்தினர்.

The post கிளிநொச்சியில் உளவு இயந்திரம் செலுத்தி பெண்கள் சாதனை! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply