வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தல் இன்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மின் பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்திற்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் சம்பளம் கிடைத்த மறுநாள் மின் பட்டியலை செலுத்த காத்திருக்கும் நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின்சாரசபையினர் மின்சாரத்தை துண்டித்துச்  செல்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முன்னறிவிப்பு இன்றி மின் துண்டிக்கப்படுவது குறித்து மின்சாரசபை காரியாலயத்தில் பாவனையாளர்கள் சிலர் முரண்பட்டமையும் அண்மையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்படத்தக்கது.

Leave a Reply