இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! – கல்வி அமைச்சர்

 

கல்வி நிர்வாகத்தின் ஊடாக அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வருங்காலத்தில், 1-5 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும்.

6-10 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும் 10-13 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மேல்நிலைப் பாடசாலைகளாகும் வகைப்படுத்தப்படும்.

2018-2020 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *