காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு..!! தடுப்பூசியா காரணம்?

காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி  திடீரென உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு செலத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கந்தகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஆண், காதில் ஏற்பட்ட நோய் தாக்கத்தால்  ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் . 

குறித்த  நோய்க்கான சிகிச்சைக்காக 11 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும் 12 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட உபாதையினால் குறித்த நோயாளி உயிரிழந்ததாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உயிரிழந்த நோயாளிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசி குறித்த விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, குறித்த தடுப்பூசி ஹொரணையில் அமைந்துள்ள மருத்துவ நிறுவனமொன்றில் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply