சுதந்திர கட்சியில் இருந்து மைத்திரியை விரட்டுங்கள்! மேர்வின் சில்வா அறைகூவல்

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டுங்கள் என அக்கட்சி உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது இந்நாட்டில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுத்த கட்சியாகும்.

கிராமத்தில் பிறந்தவர்களுக்குக்கூட வாய்ப்பளித்த கட்சி. இப்படிப்பட்ட கட்சியானது மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் சீரழிந்துள்ளது.

எனவே, மைத்திரிபால சிறிசேனவை விரட்டுமாறு கட்சி ஆதரவாளர்களிடம், உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதுவரை அவர் இழைத்துள்ள தவறுகளே போதுமானவை. அவருக்கு மூளையில் பிரச்சினை இருப்பதையே அவரின் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றது. 

அரபு நாடாக இருந்திருந்தால் அவர் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பார் என கூறியுள்ளார்.

Leave a Reply