நச்சுப்புகையை வெளியேற்றும் வாகனங்கள்: கடுமையாகும் சட்டம்..!

 

நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நச்சுப்புகையை வெளியேற்றி வரும் நிலையில், இது தொடர்பாக வழக்குத் தொடரவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ பொலிஸார் தவறிவிட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின்படி, மோட்டார் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருக்கு நச்சுப்புகையை வெளியேற்றும் வாகனங்களை சோதனை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மோட்டார் போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நச்சு கறுப்புப்புகையை வெளியிடும் அரச வாகனங்கள் உட்பட்ட வாகனங்களுக்கு 2000 – 5000 ரூபாவிற்கு குறையாமல் அபராதம் விதிக்க முடியும் என்ற போதிலும் பொலிஸார் கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply