சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி சூடு; சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதி!

 

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சந்தேகநபர் ஒருவர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்தச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ரன்மினிதென்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  சந்தேக நபரை கைது செய்ய முயன்ற போதே  பொலிஸார்  துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

காயமடைந்த சந்தேக நபர்  திஸ்ஸமஹாராம  பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் . 

Leave a Reply