தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனன தினம் இன்று!

தந்தை செல்வாவின் 126 ஆவது ஜனன தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா, மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவ சிலையடியில், குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அன்னாரது நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்ததுடன், மலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply