இஸ்ரேல் காசா போர் : 14 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

காசா போரில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கு, மயக்க மருந்து இன்றி இரு கால்களும் துண்டிக்கப்பட்ட துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே இடம்பெற்று வரும் போர், 6 மாதங்களை நெருங்கும் நிலையில் தீவரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த போரின்போது, கடந்த ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி, காசாவை சேர்ந்த 14 வயது சிறுமியான Leyan இன் வீட்டின் மீது குண்டு பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இதன்போது, குறித்த சிறுமிக்கும் பலத்த காயம் ஏற்பட்டதுடன் இரு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், காசாவில் துரதிஷ்டவசமாக மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால், சிறுமிக்கு மயக்க மருந்து வழங்காமலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுமியின் இரு கால்களும் அகற்றப்பட்டன.

இதனையடுத்து, மனிதாபிமான அமைப்புகளின் உதவியுடன், சிறப்பு சிகிச்சைக்காக Leyan சிகாகோவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்படி, தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி சிகாகோவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட சிறுமி Leyan, எதிர்காலத்தில் வைத்தியராகி, பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவ இருப்பதாக தெரிவித்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply