கடற்கரையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்..! – ஆலயத்திற்கு சென்ற முதியவர் சாவு; யாழில் துயரம்

யாழ்ப்பாணத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

நேற்றையதினம் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல்போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

68 வயதான சின்னத்தம்பி அர்ஜீனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடல்கூற்றுப் பரிசோதனையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என தெரியவருகின்றது.

Leave a Reply