வைக்கோலுக்கு தீ வைக்க சென்ற வயோதிபர் தீயில் சிக்கி உயிரிழப்பு..!

 

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செருபிட்டிய பிரதேசத்தில் ஒருவர் தீயில்  எரிந்து உயிரிழந்துள்ளார்.

செருபிட்டிய, தமனவெல பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விவசாயத்திற்காக வயலில் வைக்கோலுக்கு தீ வைக்க போவதாக கூறிவிட்டு, வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாததால் இறந்தவரின் பேரன் வயலுக்கு தேடி சென்றுள்ளார்.

அப்போது தாத்தா தீயில்  சிக்கி எரிந்து உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

Leave a Reply