ஜனாதிபதி சற்றுமுன் வழங்கிய நியமனம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக   ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply