தமிழரசுக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் விரைவில் சந்திப்பு

 

தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் இது தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக அநுர குமார திசாநாயக்க  அண்மையில் கூறியிருந்தார்.

அதன் பிரகாரம் அடுத்த வாரம் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்து தமிழரசுக் கட்சி பிரதிநிதிகள் விசாரித்தறிந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளனர். 

Leave a Reply