நந்தசேனவின் வெற்றிடத்திற்கு வீரசேன கமகே..! விரைவில் சத்தியப்பிரமாணம்

 

அனுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கே.எச்.நந்தசேனவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை எம்.ஜி.வீரசேன நிரப்ப உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார்.

நீண்டகாலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற உறுப்பினர், நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இதேவேளை எச்.நந்தசேனவின் மறைவுடன் வெற்றிடமாகவுள்ள அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.

மேலும், நீண்ட காலம் வடமத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரசேன கமகே, கைத்தொழில் அமைச்சராகவும், 7 தடவைகள் பதில் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply