அரசாங்க மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவருக்கும் அனுமதி: காசல் மருத்துவமனை பணிப்பாளர் தகவல்..!!

மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர்   தெரிவித்துள்ளார்.

மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக  காசல் மருத்துவமனை (Castle Hospital) அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறையினால் கர்ப்பிணிப் பெண்கள் தமது குழந்தைகளை நல்ல மனநிலையுடன் பிரசவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இப் புதிய திட்டத்தினூடாக பிரசவ வேதனையானது தனது கணவனுடன் பகிரப்படுவதோடு, தாய்-தந்தை-குழந்தை உறவு படி நிலை மேலும் உறுதியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவன்மாரை அனுதிக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ள நிலையில்,  அரசாங்க மருத்துவமனைகளிலும் முதன் முறையாக அனுமதிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *