சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக TRP-யில் இடம்பிடித்துள்ளது.
இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் என்பவரும், கதாநாயகி மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா என்பவரும் நடித்து வருகிறார்கள்.
இவர்களை போலவே இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் ரோகிணி. இவருடைய நிஜ பெயர் சல்மா அருண். இவர் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் பிரபலமாகியுள்ளார்.
ரோகிணியின் நிஜ கணவர், மகன்
இதற்கு முன் பாரதி கண்ணம்மா, நம்ம வீட்டு பொண்ணு, ராஜா ராணி போன்ற சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளாராம்.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகை சல்மா அருணுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை சல்மா அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
The post சிறகடிக்க ஆசை ரோகிணியின் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.