நடிகர் பிராசந்திற்கு இரண்டாவது திருமணமா?

பிரஷாந்த்
டாப் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை பிரஷாந்த். இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து Goat திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் அந்தகன் திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கிறது. இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் உச்சத்தில் இருந்த நடிகர் பிரஷாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு கிரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.

இரண்டாம் திருமணம்
ஆனால், திருமணம் நடந்து முடிந்த ஒன்றரை மாதத்திற்கு பிறகு தான் தெரியவந்தது, அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று. அதன்பின் இந்த விஷயம் நீதி மன்றம் வரை செல்ல 2009ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அந்த சமயத்தில் சினிமாவில் தனக்கு இருந்த மார்க்கெட்டையும் இழந்தார் பிரஷாந்த். அதுமட்டுமின்றி அவருடைய குடும்பமும் சோகத்தில் உடைந்துபோனது.

இந்த நிலையில், தனது மகன் பிரஷாந்த் திருமணம் குறித்து தியாகராஜன் பேசுகையில், எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றால் அது அவருடைய திருமணம் தான் என கூறினார். முதல் திருமணம் தான் தவறாக போய்விட்டது, அவருக்கு மற்றொரு திருமணம் செய்து வைப்பேன் என பிரஷாந்தின் இரண்டாம் திருமணம் குறித்து பேசினார் தியாகராஜன்.

The post நடிகர் பிராசந்திற்கு இரண்டாவது திருமணமா? appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *