சூரிய கிரகணத்தின் போது சீனாவின் கின்னஸ் சாதனையை முறியடித்த கனேடியா

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சூரிய கிரகணத்தின்போது, சீனா நிகழ்த்தியிருந்து கின்னஸ் சாதனையை, இம்முறை கனேடியா முறியடித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற சூரிய கிரகணத்தின்போது, சூரியனைப்போன்று உடையணிந்து கனேடியர்கள் கின்னஸ் சாதனை படைந்துள்ளனர்.

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த நிலையில், கனேடியர்கள் சிலர், இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள நயாகரா நகரில், நயாகரா நீர்வீழ்ச்சியின் முன் 309 பேர் சூரியனைப்போல மஞ்சள் நிறத்தில் உடையணிந்து ஒன்று திரண்டுள்ளார்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உட்பட, பலர், பல்வேறு காரணங்களுக்காக, கின்னஸ் சாதனை படைக்கக் கூடியது, தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாக அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *