அரிசியின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி திருகோமலை நகர சபைக்கு முன்பாக இன்று(09) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது அரிசியின் விலையினை குறைக்குமாறு வலியுறுத்தி சுலோகங்களை ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.