பரீட்சை திணைக்களம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!

 

எதிர்காலத்தில் பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை பரீட்சைகளுக்கு பொறுப்பாக ஒரு பிரிவும் ஏனைய பரீட்சைகளுக்கு பொறுப்பாக மற்றொரு பிரிவும் இயங்கும் வகையில் பரீட்சை திணைக்களத்தை இரண்டு பகுதிகளாக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போர் முடிவடைந்த பின்னர் காசா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உறுதியளித்துள்ளதாக  அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை 2025 அல்லது 2026ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, 

“நான் 18 வயதில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தேன். 21 வயதில் வெளியாகினேன். இன்று 21 வயதில் நுழைகின்றனர். இப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறேன். 

2025 அல்லது 2026 இலிருந்து ஒரு சட்டம். இந்த பரீட்சை டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். அவர்கள் உரிய மாதத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் அதை மீறினால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *