தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்ட மூலக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிரதான முனையங்கள் மூலம் எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து கிடங்குகளில் போதுமான இருப்புக்களை பராமரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், எரிபொருள் இருப்புக்களை பராமரிப்பது தொடர்பாக அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
விநியோகஸ்தர்களின் எரிபொருள் ஆர்டர் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில், காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக போதுமான டேங்கர்களை ஈடுபடுத்த இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் தீர்மானித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.