சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அமைந்துள்ள ஈரான் துணைத் தூதரகம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலங்கை கண்தானம் விடுத்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமையை மேலும், அதிகரிக்காமல், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், வன்முறையினை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் வலியுறுத்த விரும்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இந்த விடயங்களுக்காக யன்னா உடன்படிக்கையை கடைப்பிக்குமாறும் இலங்கை இஸ்ரேலிடம் கோரியுள்ளது.
முன்னதாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.