ரணிலை வெல்ல வையுங்கள்… தீர்வைப் பெற்றுத் தருவது எனது பொறுப்பு.. அமைச்சர் டக்ளஸ்..!! .

தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள ரணில் விக்கிரமசிங்க வை  தமது வாக்குகளால் வெல்ல வைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியுடன் உள்ள ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்கள் தமது வாக்குகளால் வெல்ல வைக்க வேண்டும் என தாங்கள் கூறுவது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயங்களை அவரால் செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் அளித்த அமைச்சர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க போட்டியிட உள்ளார் அவரே ஜனாதிபதியாக வேண்டும்.

அதற்குப் பல காரணங்கள் உண்டு சுருக்கமாக கூறின் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றக் கூடிய தலைமைத்துவம் மற்றும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விருப்பம் அவரிடம் காணப்படுகிறது.

நாடு பொருளாதார ரீதியில் விழுந்து கிடந்த போது நாட்டை முன்னேற்றுவதற்காக யாரும் முன் வரத நிலையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்று மக்கள் வரிசையில் நீக்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

சிலர் அரசியல் நீதியில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைக்க மாட்டார் அவரை எவ்வாறு நம்புவது என கேட்கக்கக்கூடும் ரணிலை நம்பாவிட்டால் என்னை நம்புங்கள் நான் செய்விப்பேன்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை தீரா பிரச்சனையாக கொண்டு செல்லும் அரசியல்வாதி நான் அல்ல மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதை எனது நோக்கம்.

சில தமிழ் கட்சிகளுக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீரா பிரச்சனையாக வைத்திருப்பதன் மூலம் தமது அரசியல் சுகபோகங்களையும் அரசியல் இருப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

ஆகவே நான் மக்களுக்கு ஒன்றை கூறுகிறேன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்குகளால்  மக்களின் பலத்தை காட்டுஙகள் மக்களுக்கான தீர்வினை நான் பெற்றுத் தருவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *