இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பாகிஸ்தான் அகதிக்கு நேர்ந்த சோகம்..!

அவுஸ்திரேலியாவில் வணிகவளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்ற பாகிஸ்தான் அகதியொருவரும் உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் சிட்னியின் பொன்டி வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் பயங்கரமான கத்திக்குத்து தாக்குதலொன்று இடம்பெற்றது.

குறித்த தாக்குதலை குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது ஜோ கௌச்சி என்ற நபரே மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் மனநிலை பாதிப்புக்குள்ளானவர் சில மாதங்களிற்கு முன்பே சிட்னியில் குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்டியின் வெஸ்ட்பீல்ட் வணிகவளாகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவேளையே 30 வயதுடைய பராஜ் தாஹிர் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர்  ஐக்கிய நாடுகளின் அகதிகளிக்கான தூதரகலாயம் ஊடாக அவர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

பாக்கிஸ்தானின் அரசமைப்பின் கீழ் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்ட சமூகத்தினர் தொடர்ச்சியாக வன்முறைகளை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இவர் அங்கிருந்து தப்பிவெளியேறினார்.

அன்று இவர் கடமைக்கு சமூகமளிக்கவேண்டியதில்லை என்ற போதிலும் சில பணியாளர்கள் வருகைதராததால் இவர் பணிக்கு வந்தவேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்த நபர் பெண்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய வன்முறையில் ஐந்து பெண்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *