வவுனியா,மாமடுப் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாமடுப் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு தினமான நேற்றையதினம்(14) மாலை வவுனியா, மாமடு – கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர் பயணித்த போது வீதியில் நின்ற யானை குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
பின்னர் அவ் வீதியால் சென்றோர் தாக்குதலுக்குள்ளான நபரை வவுனியா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
மாமடு – கள்ளிக்குளம் வீதியில் உள்ள பல காணிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ள போதும், அவ் வீடுகளில் பலரும் குடியிருக்காமையால் அப் பகுதி பற்றை காடுகளாக மாறியுள்ளதுடன், காட்டில் இருந்து வரும் யானைகள் அப் பற்றைகாடுகளின் ஊடாக வீதிக்கு வருகை தருவதாகவும், தினமும் அப் பகுதியில் நடமாடித் திரிவதுடன் வீதியில் செல்வோரை தாக்க முயற்சிப்பதாகவும் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.