வடக்கு ஆளுநரின் வாகனத் தொடரணி யாழில் விபத்து…! நடந்தது என்ன?

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பயணித்த உத்தியோகபூர்வ வாகனம் யாழ்.மீசாலைப் பகுதியில் நேற்றைய தினம்(14)  விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வட மாகாண ஆளுநரின் வாகன தொடரணி,  முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனத்துடன்  மோதியதாலே குறித்த  விபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் பாதசாரிகள் கடவையில் வேகத்தை கட்டுப்படுத்திய நிலையில், வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்த ஆளுநருடைய  வாகனத் தொடரணி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *