தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏழை மக்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
கொழும்பு நகர வீதிகளில் உள்ள வறிய மக்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து அவர்களுடன் புத்தாண்டைக் கழித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது முகநூல் பதிவில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், சந்திரிக்காவின் இந்த மனித நேய செயலுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.