புத்தாண்டை முன்னிட்டு கம்பளை – கம்பளவெல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் நடப்பட்டிருந்த் கிறீஸ் பூசப்பட்ட மரம் சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு நிகழ்வு இடம்பெறும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கிறீஸ் பூசப்பட்ட மரத்தில் 5 பேர் கொண்ட குழுவொன்று ஏறியுள்ளது.
இந்நிலையில் மரத்தில் ஏறிய இக்குழுவினர் நீண்ட நேர முயற்சியின் பின்னர் மரத்தின் உச்சியில் ஏறி நின்று வெற்றிக் கொடியை எடுக்க முற்பட்ட போது குறித்த மரம் அங்கிருந்த இளைஞர்கள் மீது சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.