தனது விமான சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் இன்று முதல் கொழும்பு மற்றும் வங்கதேசத்தின் டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது
இதுவரை கொழும்பில் இருந்து துபாய், சென்னை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று இடங்களுக்கு மட்டுமே ஃபிட்ஸ் ஏர் சேவை இயங்கியது
அதன்படி, பங்களாதேஷ் இடையே புதிய வழித்தடங்களின் விரிவாக்கத்துடன், அவர்களின் நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது
இதன் மூலம் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தக துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.