சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த நபர்..!!

பிரபல ரஷ்ய Influencer-ன் சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்தமைக்கு  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்(influencer) மாக்சிம் லியுட்டி(Maxim Lyutyi), தனது ஒரு மாத வயது மகன் கொஸ்மோவின் (Kosmos) துன்பகரமான மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளார்.

எவ்வாறெனில் Maxim Lyutyi தீவிரமான விசித்திரமான நம்பிக்கைகளைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.  குழந்தைக்கு  சரியான உணவு கொடுப்பதற்கு பதிலாக சூரிய ஒளியில்  வைப்பதையே  அவர் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

குழந்தையை சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் அவனுக்கு மனிதர்களால் இயலாத சக்திகளை வழங்க முடியும் என்று நம்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறான மூட நம்பிக்கை  கொடிய விளைவாக  அமைந்தது.  சரியான உணவு கொடுக்கப்படாத  குழந்தை நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு சோச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தது. 

Lyutyi முன்னதாக தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாகவும், தனது செயல்களுக்கு ஆன்லைனில் நியாயம் கற்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பிராணா” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கடுமையான வீகன் (சைவ) உணவு முறையை கடைபிடித்ததாகவும் அவர் கூறப்படுகிறது. 

அத்துடன் இது சுவாச உணவு முறை (Breatharianism) என்றும் அழைக்கப்படுகிறது.

இது மனிதர்கள் சூரிய ஒளியில் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற ஆபத்தான மற்றும் நிரூபிக்கப்படாத கோட்பாடு ஆகும்.

ஆகவே பிறந்த குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *