மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை!

 

மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில் தாய்லாந்தில் இருந்து அவர்கள் நாட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் 06 ஆண்களும் இரண்டு பெண்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 4ஆம் திகதி மியன்மாரின் மியாவாடி இணையக் குற்றப் பகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர்களை விடுவிப்பதற்காக மியன்மார் பாதுகாப்புப் படையினர் செயற்பட்டனர்.

இவர்களை இலங்கைக்கு அனுப்பும் நோக்கில் மியாவாடி மத்திய பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 11ஆம் திகதி மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் அவர்களை தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அத்துடன் தாய்லாந்திற்கு அனுப்பப்பட்ட 08 இலங்கையர்களும் இன்று இலங்கை வந்துள்ளதாகவும், அவர்களின் வாக்குமூலங்களை பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *