இலங்கையில் பாலியல் சம்மந்தமான நோய்களில் கடந்த 03 வருடங்களில் மட்டும் 1700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மையத்தின் பணிப்பாளர் ஜனக வேரகொட தெரிவித்துள்ளார்.
அவர்களில் 18-25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 550 க்கும் அதிகமானவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது முழு நோயாளர்களின் எண்ணிக்கையில் 03 இல் ஒரு பங்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பாலியல் நோய்கள், மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகிண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக வைத்தியர் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் இந்த நிலைக்கு நாட்டில் அதிகரித்துள்ள ஸ்பாக்களின் எண்ணிக்கை எனவும் இளைஞர்கள் அதில் அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.