ராஜபக்சக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் சாய வைத்து பொதுவேட்பாளராக அவரை களமிறக்கினார். ஆனால் இன்று மாறுபட்ட கருத்தை வெளியிடுகின்றார்.
ஆகவே, ராஜபக்சக்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்துகள் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.