யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி வடக்கு பகுதி காணி ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று இன்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
கரவெட்டி வடக்கு, கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து காணி உரிமையாளரால் நெல்லியடி பொலீஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து குறித்த கைக் குண்டி பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.