இலங்கையில் சீர்திருத்த வேகம் பேணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் வாஷிங்டனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
பணவீக்கக் குறைப்பு, வருமான அதிகரிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட பல அம்சங்களில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமைக்காக கோபிநாத் இலங்கை அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.