இரத்தினபுரி – கலவானை பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து பெருந்தொகை தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியும், தங்கப் பொருட்கள் திணைக்களத்திற்கு பொறுப்பான அதிகாரியுமே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கலவானை பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 33 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
68,978,357 ரூபா பெறுமதியான மோதிரங்கள், வளையல்கள், காதணிகள், பதக்கங்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் காணாமல்போயுள்ளதாக நிதி நிறுவனத்தின் முகாமையாளர் களவாணை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.