யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மானிப்பாய் – காரைநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில், பின்புறமாக ஆறுகால்மடம் பகுதியில் இருந்து வருகை தந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
இதன் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்..
இதேவேளை பட்டாரக வாகனம், இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்த நிலையில் வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.மாவட்ட போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.