படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்..! மன்னாரில் துயரம்..!

 

மன்னார்  – முத்தரிப்புத்துறையில்  கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று   காலையில் இடம்பெற்றுள்ளது.

 மூன்று பிள்ளைகளின் தந்தையான தேவராஜா பீரிஸ் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இவர் உயிரிழந்தார்.

 உயிரிழந்தவரின் சடலம் தற்போது சிலாவத்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *