பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வருவாய் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகள் நேற்றையதினம்(23) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நான்கு குடும்பங்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த உபகரணங்களை நலன்புரி சங்கத்தின் தலைவர் ச.குகதாசன் கலந்து கொண்டு வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.