வவுனியாவில் தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம் எனும் தொனிப்பொருளில் பல்பொருள் அங்காடி..!!

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய பல்பொருள் அங்காடி இன்றைய தினம் (2024.04.25) மாவட்ட செயலாளர் பி. ஏ. சரத்சந்ர அவர்களினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

காய்கறிகள், பழவகைகள், சமையலறை உபகாரணங்கள், கைவினைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள்,  தைத்த ஆடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை நேரடியாக சந்தப்படுத்தும் வாய்ப்பு இவ் அங்காடியின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *