புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரிப்பு..!!

புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை அவதானிக்கும் போது, ​​அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள் இரண்டு முதல் மூன்று வருட குறுகிய காலப்பகுதியில் விவாகரத்து செய்யும் நிலை காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுத் பிரிவின்  சிரேஷ்ட பிரதிப் பதிவாளர்  நாயகம், சட்டத்தரணி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார். 

குறிப்பாக அறிவிக்காமல் கைவிட்டு செல்வதே விவாகரத்துக்கான முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *