வவுனியாவில் இரா.உதயணன் இலக்கிய விருது வழங்கும் விழா!

இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரா உதயணன் இலக்கிய விருது வழங்கும் விழா வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா, சிந்தாமணி விநாயகர் ஆலய மண்டபத்தில் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்தை திருமதி அருந்ததி மற்றும் க. அகரன் வழங்கியிருந்ததுடன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து பேராசிரியர் சபா ஜெயராசா எழுதிய தமிழ் கலைச் சொற்கள் நூல் வெளியீடு இடம்பெற்றதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், இலக்கிய விருதுகள், சிறந்த ஊடகவியலாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் ஊடகவியலாளர் விருதும் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *