இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்புமாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, மட்டக்களப்பு – காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் நோக்கிய தொடருந்து சேவையினை விஸ்தரிப்பதற்கு எதிர்காலத்தில் இந்தியா நடவடிக்கையெடுக்கும் என்று உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கம், மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.